ரெம்டெசிவர் மருந்து விநியோகம் திடீர் நிறுத்தம் : கோவையில் மருந்து வாங்க வந்தவர்கள் சாலை மறியல்!!

17 May 2021, 3:21 pm
Remdesiver - Updatenews360
Quick Share

கோவை : ரெம்டெசிவர் மருந்து கிடைக்காததால் நோயாளிகளின் உறவினர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உட்பட 5 மாவட்டங்களில் ரெமிடிசிவர் மருந்து வழங்கபடும் என்று அரசு அறிவித்ததை தொடர்ந்து கோவை அரசு மருத்துவகல்லூரியில், ரெமிடிசிவர் மருந்தானது கொடுக்க ஆரம்பித்தனர். அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் அதிகமான அளவில் கூட்டம்கூடி நோய்தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து டோக்கன் முறையில் தினமும் 50 பேருக்கு மட்டும் வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று திடீரென மருந்து வழங்குவதை நிறுத்தியதால் ஆவேசமடைந்த மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் இதுகுறித்து திருப்பூரில் இருந்து நோயால் பாதிக்கப்பட்ட தனது நண்பனுக்கு மருந்து வாங்க வந்தவர் தெரிவிக்கையில், அரசு தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக மருந்து விற்பனை துவங்கியுள்ளது அதனால் இங்கு மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்கள்.

நான் காலை 6 மணிமுதல் வரிசையில் காத்திருக்கிறேன், தனியார் மருத்துவமனையில் கிடைக்காததால்தான் கோவைக்கு வந்துள்ளேன். மேலும் தனியார் மருத்துவமனைகளில் சரளமாக மருந்துகள் கிடைக்கும்வரை அரசு விநியோப்பிதை நிறுத்தக்கூடாது, இதனால் பலபேர் உயிரிழப்பதை அரசு தடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பீளமேடு போலீசார் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.

Views: - 100

0

0