ஆற்று மணலை அள்ளும் முடிவை திரும்பப் பெறாவிட்டால் தமிழக அரசுக்கு மாபெரும் சிக்கல் : கள் இயக்கம் நல்லசாமி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
26 January 2022, 8:22 pm
Quick Share

கரூர் : ஆற்று மணலை அள்ளும் தமிழக அரசின் முடிவை திரும்பப் பெறாவிட்டால், மக்களின் எதிர்ப்பை சம்பாரிக்க வேண்டியிருக்கும் என்று கள் இயக்கம் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கரூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஆற்று மணல் அள்ளப்படவில்லை. அதற்கு மாற்றாக எம்.சாண்ட், பி.சாண்ட் பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதனால் ஆறுகளில் அள்ளப்படும் மணல்களை மறந்து விட்டனர் பொதுமக்கள்.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது புதிதாக அமைந்துள்ள தற்போதைய திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஆற்று மணலை அள்ளி யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 1000 என நிர்ணயம் செய்து விற்பதற்கு முடிவு செய்துள்ள நிலையில், இது தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் ஒரு செயல். ஏற்கனவே ஆற்று மணல் அல்ல பட்டுள்ள நிலையில், தற்பொழுது குறைந்தளவிலான மணலே உள்ளன. இதையும் அள்ளினால் நிலத்தடி நீர் சரி ஊட்டுவது வெகுவாக குறைந்து போகும். ஆற்று நீரை தூய்மைப்படுத்துவது மணல்தான் இந்த அரசு மணல் அள்ளுவதற்கு அறிவித்த இந்த அறிவிப்பை தற்போதைய திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை சந்திக்கக்கூடும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்று தெரிவித்தார்.

Views: - 1671

0

0