ஜவுளிக்கடையின் மேல்தளத்தை உடைத்து கொள்ளை : வெளியான சிசிடிவி காட்சி…

Author: kavin kumar
12 February 2022, 2:31 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜவுளிக்கடையின் மேல்தளத்தை உடைத்து உள்ளே நுழைந்து 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நேரு வீதியில் மூன்று தளங்களுடன் ஹை பேஃஷன் என்கிற ஜவுளி கடை இயங்கி வருகிறது, இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி காலை கடையின் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று போது அங்கிருந்த பணம் வைக்கும் கல்லா பெட்டி திறந்து அதில் இருந்த ரூ-.1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து கடையின் உரிமையாளர் செந்தில் பெரிய கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நள்ளிரவு மர்ம நபர் யாரோ கடையின் மேல் தளத்தை உடைத்து உள்ளே வந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் பை மாட்டிகொண்டு நள்ளிரவு 1 மணிக்கு நேரு விதியில் செல்வதும், பின்னர் காலை 4 மணி அளவில் அதே வழியாக வருவதும் பதிவாகி இருந்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு கடையின் மேல் தளத்தை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Views: - 685

0

0