வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கடை ஒன்றுக்கு ரூ.100 வசூல் : ஆதரவாக செயல்படும் நகராட்சி அதிகாரிகள்.. புலம்பும் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 6:33 pm
Market 100 Rupee - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலா தளமான கொடைக்கானலில் நகராட்சி பகுதியில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.இச்சந்தையில் கொடைக்கானல் நகராட்சிப் பகுதி மட்டும் அல்லாமல் ஊராட்சி பகுதி மக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தை சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து விற்பனைக்காக காய்கறி மற்றும் மற்ற பொருட்களை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்யும் வியாபாரிகள் சந்தை ஒப்பந்தகாரர் 100 ரூபாய் வசூல் செய்வதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

ஆனால் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமல்லாமல் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இன்று நடைபெறும் காய்கறி சந்தையில் அரசு முத்திரை இல்லாமல் ஒப்பந்ததாரர் வசூல் செய்கிறார்.

கொடைக்கானல் நகராட்சி பொதுமக்களுக்கான நகராட்சி கிடையாது இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவான நகராட்சி ஏற்கனவே நகராட்சி பகுதிகளில் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறது.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது என சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதையும் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அப்படியிருக்கும்போது கொடைக்கானல் நகராட்சி வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர் வசூல் செய்வது எப்படி, நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கேட்பார்கள் என்ன நடந்தாலும் நகராட்சி அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருப்பார்கள் என்று கூறிச் சென்றனர் பொதுமக்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வியாக அமைந்துள்ளது.

Views: - 2384

0

0