தொடங்கியது கார்த்திகை மாதம்… கோவில்களில் ஒலிக்கும் சரண கோஷம்.. மாலை அணிவதற்காக குவிந்த ஐயப்ப பக்தர்கள்!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 9:18 am
Quick Share

கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு கார்த்திகை உற்சவ நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.

iyyappan pilgirms - updatenews360

அதிகாலையில் ஸ்ரீ தர்மசாஸ்திராவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி த்வஜஸ்தம்பம் எழுந்தருளில் தொடங்கி பின்னர் கோ பூஜை நடைபெற்றது. கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

iyyappan pilgirms - updatenews360

ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் இன்று சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவர். அதன்படி கோவிலின் சன்னதிக்கு முன்பு சரண கோஷம் போட்டு குருசாமி தலைமையில் மாலையை போட்டுக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

iyyappan pilgirms - updatenews360

இதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனர்கள்.

Views: - 425

0

0