கோவை அருகே களைகட்டிய கஞ்சா, போதை மாத்திரை விற்பனை : சுற்றித்திரிந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 7:23 pm
Ganja - Updatenews360
Quick Share

கோவை : போத்தனூரில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது – 2,500 மாத்திரைகள் பறிமுதல்…!

கோவை போத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பாக செட்டிபாளையம் சாலை ரயில்வே பாலம் அருகே போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்த அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் போத்தனூரை சேர்ந்த முகமது யூசுப், வெள்ளலூர் சேர்ந்த அப்துல் ரஹீம், போத்தனூர் சேர்ந்த சையது அபுதாஹிர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வழக்கமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 2,500 மாத்திரைகள் ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 204

0

0