வகுப்பறையில் பெஞ்ச், மின்விசிறிகளை அடித்து நொறுக்கும் மாணவர்கள்.. அரசுப் பள்ளியில் அட்டூழியம்..!! அதிர்ச்சி காட்சிகள்!

Author: Babu Lakshmanan
8 March 2023, 9:23 pm
Quick Share

தருமபுரி ; பாலக்கோடு அருகே மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் உள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்புக்கு செய்முறை விளக்கம் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்த பிறகு நேற்று அ.மல்லாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைக்கப்பட்டது . மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் உறுதி அளித்ததின் பேரில் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் நிலையில் உள்ளது.

இது போன்ற சம்பவம் இப்பள்ளியில் மூன்றாவது முறை நடைபெறுகிறது. பள்ளி நிர்வாகமும் சரிவர கவனிக்காததால் மாணவர்களிடையே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஒரு சில மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என தெரிகிறது.

ஆகையால் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும், அப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் சொத்துக்களை உடைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 567

0

0