கொளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் கொடி பறக்குமா? ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் சீமான்..!!!
19 November 2020, 11:07 amதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறு பாக்கம் தொகுதியில் யாரை வேட்பாளரக களமிறக்கலாம் என அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை கையாண்டு வருகின்றன.
இதனிடையே நாம் தமிழர் கட்சி தனித்து நின்று சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஸ்தான தொகுதியான கொளத்தூரில் சீமான் கை வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
ஆம், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாம் போட்டியிட போவதாக சீமான தெரிவித்துள்ளது திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண் வேட்பாளர்களை அதிகம் களமிறக்குவதில் மும்முரம் காட்டி வருகிறது நாம் தமிழர் கட்சி.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், பாஜகவின் யாத்திரை மூலமாக நாம் தமிழர் கட்சிக்கே அதிக விளம்பரம் கிடைத்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக தான் பேசி வரும் கொள்கையை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாக கூறினார்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாம் போட்டியிட தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சீமான கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 12 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
அதே போல கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும், 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது. நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வளர்ச்சி பெற்றும் நாம் தமிழர் கட்சியின் இந்த அறிவிப்பு திமுக மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.