காரில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது…

Author: kavin kumar
7 February 2022, 4:20 pm
Quick Share

திருவள்ளூர் : திருவள்ளூரில் கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையான பொன்னியம்மன் பட்டறை செக் போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் சுமார் 50 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதேபோல் திருவள்ளூர் காக்கலூர் இடைமடை பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மற்றொரு காரை சோதனையிட்ட போது, அதிலும் இரு பைகளில் சுமார் 60 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவையும், பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த நிலமலை, ரமேஷ் மற்றும் உமா ஷங்கர் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 428

0

0