சூடு பிடித்த தேர்தல் களம்…! காலில் விழுந்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்…

Author: kavin kumar
7 February 2022, 4:55 pm
Quick Share

திருவாரூர் : திருவாரூர் நகராட்சி தேர்தலில் பேட்டியிடும் பாஜக வேட்பாளர் பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

திருவாரூர் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் பாஜக சார்பில் 8 வார்டுகளில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த வேட்பாளர்கள் 3,7,10 12,16 17,21,27  ஆகிய வார்டுகளில் திருவாரூர் நகராட்சி பொருத்தவரை பாஜகவினர் களம் காண்கின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பா.ஜ.க நகர பொதுச் செயலாளரான கணேசன் என்பவர் 21 வது வார்டு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 

இவர் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட நெய்விளக்கு தோப்பு ஆற்றுப்பாலம், ராணுவ நகர் ,நேதாஜி சாலை மருதபட்டினம் சாலை ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்றுப் பாலம் அருகில் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கியவர் அங்கு உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தி வாக்கு சேகரித்தார். மேலும் அவர் கடைக்காரரின் காலில் விழுந்தும் அவரிடம் ஆசி பெற்றும் வாக்கு சேகரித்தார். 

அவரைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்ற கணேசன் மூதாட்டிகள் மற்றும் தன்னை விட வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் பத்துக்கும் மேற்பட்ட  பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திமுக அதிமுக  ஆகிய இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள்  இன்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Views: - 460

0

0