திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேற வாய்ப்பு : துரைமுருகன் கணிப்பு!!

2 October 2020, 4:33 pm
Duraimurugan - updatenews360
Quick Share

வேலூர் : வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கணித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள வண்டரந்தாங்கல் கிராமத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி துணைதலைவரும், திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசினார் . இக்கிராம சபாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக நடத்துவது போட்டி கிராம சபை அல்ல மக்களுக்காக குறை கேட்கும் கிராம சபை கூட்டம் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சீட்டுகள் பத்தவில்லை என வெளியேறுவார்கள், அதே போல அங்கே உள்ள சிலரும் திமுக கூட்டணிக்கு வருவார்கள் இது சகஜம் தான் என கூறினார்.

திமுக மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை சந்திக்க தயார். எப்படி இருந்தாலும் இவைகள் அனைத்தும் 4 மாதம் தான் இருக்கும் பின்னர் அவை தூக்கி எறியப்படும் என்று கூறினார்

Views: - 35

0

0