சீதனத்தால் வந்த வினை.! மருமகனை அடித்துக் கொன்ற மாமனார் கைது.!

25 July 2020, 12:09 pm
villupuram Arrest - Updatenews360
Quick Share

விழுப்புரம் : திருவெண்ணெய் நல்லூர் அருகே மாமனாரே மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கிராமம் மேல்தணிகலாம்பட்டு. இந்த கிராமத்தில் செல்வமணிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் ராஜலட்சுமிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் செல்வமணிக்கு பெண்ணின் தாயார் அம்புஜம் என்பவர் வீட்டுமனை ஒன்றை சீதனமாக எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த இடம் தொடர்பாக செல்வமணிக்கும் அவரது மாமனார் ராஜேந்திரனுக்கும் அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்தநிலையல் ராஜேந்திரன் மற்றும் அவரது பங்காளி ஏழுமலை என்பவரும் மது அருந்தி விட்டு மீண்டும் செல்வமணியிடம் இடம் குறித்து தகராறு செய்துள்ளனர். மது போதையில் இருந்த ராஜேந்திரன் அருகில் இருந்த கட்டையால் செல்வமணியின் தலையில் தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட மீண்டும் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய் நல்லூர் காவல் ஆய்வாளர் பாண்டியன் செல்வமணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் அவரது பங்காளி ஏழுமலை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமனாரே மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.