இதை மட்டும் நீங்கள் செய்தால்…. அடுத்த நிமிடமே நீட் ரத்து செய்வோம் ; உதயநிதியை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியம்..!!!!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 8:57 pm
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் சொல்வதுபோல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், அடுத்த நொடியே நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்று தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் பயின்று முடித்துள்ள பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் மாணவிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எம்எல்ஏ கலந்துகொண்டு பி.எஸ்சி நர்சிங்-கில் 8வது பேட்ச் முடித்துள்ள 40 மாணவிகள், அதைபோல் டிப்ளமோ 46வது பேட்ச் முடித்துள்ள 50 மாணவிகள் என மொத்தம் 90 மாணவிகளுக்கு பட்டமளிப்பை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், அருட்சகோதரி பவுலின் அகஸ்டின் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனியார் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பின்னர் பேசிய தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், ஜி.எஸ்.டி-யில் இந்தியாவில் மிக அதிக வசூல் செய்து கொடுக்ககூடிய மாநிலத்தில் 2-இடத்தில் இருக்கூடியது தமிழகம்தான். இதனை பிடிக்காத சிலர் நீட் தேர்வு என்ற ஒன்றினை கொண்டுவந்து நமது கல்விகொள்கையை சீர்குழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸாடாலினும் கல்வி கட்டமைப்பை அழிப்பதற்காக கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு. அதனை கொண்டுவரவிடக்கூடாது என்பதற்காகதான் கடுமையாக போராடுகின்றனர். ஒரு காலத்தில் 94-சதவீதம் பேர் படித்து பட்டம்பெற்ற அந்த 4-சதவீதம் பேர்தான் இந்த நீட் தேர்வை எல்லோருக்கும் கிடைக்ககூடாது என்று நினைப்பதாக தெரிவித்தார்.

எனவேதான் நாடாளுமன்ற தேர்தலில் நமது முதல்வர் சொல்வதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், அடுத்த நொடியே நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்று தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

Views: - 258

0

0