தமிழக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறப்பு வீர தீர விருது : மத்திய அரசு அறிவிப்பு!!

1 November 2020, 1:19 pm
Police Awards- Updatenews360
Quick Share

தமிழக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு வீர தீர விருதினை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள், டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் என 5 அதிகாரிகளுக்க சிறப்பு வீர தீர விருது வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ம் ஆண்டு சிறப்பு புலனாய்வு வீர தீர விருது சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், எஸ்பி அரவிந்த் மற்றும் மகேஷ், டிஎஸ்பி பத்ரி நாதன், காவல் ஆய்வாளர் தாமோதிரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் ஆணையர் கண்ணன், கன்னியாகுமரியில் காவல்துறை எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு மற்றும் தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாத அமைப்பு குறித்து புலனாய்வு மேற்கொண்டவர்.

மேலும் டிஎஸ்பி பத்ரிநாதன் கோவை சிறப்பு பிரிவிலும், காவல் ஆய்வாளர் தாமோதிரன் சென்னை சிற்பபு பிரிவிலும் திறம்பட புலனாய்வு பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு வீர தீர விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படுகிறது.

Views: - 24

0

0