எந்த வேலையும் கிடைக்காததால் திருடியாக மாறிய பெண் : மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறித்தவர் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 6:20 pm
Pondy Woman Arrest -Updatenews360
Quick Share

புதுச்சேரி : வேலை கேட்பது போல் சென்று பெண் மீது மிளகாய் தூள் தூவி கழுத்தில் இருந்து தங்க நகையை பறிக்க முயன்ற பெண்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 32). இவர் லெனின் வீதி கொசப்பாளையத்தில் உள்ள திருமண தகவல் மையம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார்,
இந்நிலையில் இவரது அலுவலகத்திற்கு நேற்று காலை பெண் ஒருவர் வந்து தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமி மையத்தின் உரிமையாளர் வெளியே சென்றிருப்பதாகவும் மாலை வரும் படி கூறியுள்ளார்.

அதன் படி மாலை வந்த அப்பெண் தகவல் மையம் வாசலில் நின்று கொண்டிருந்த விஜயலட்சுமி முகத்தில் மிளகாய் தூள் தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.

இதில் சுதாரித்து கொண்ட விஜயலட்சுமி அப்பெண்ணின் கையை கடித்து விட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் செயின் பறிப்பில் ஈடுப்பட முயன்ற பெண்னை பிடித்து உருளையான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் அப்பெண்னை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதி (வயது 32) என்பவதும், வீட்டு வேலை செய்யும் பணி செய்து வந்ததாகவும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாட்கள் வேலைக்கு செல்லாததால் செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் வேலை கேட்பது போல் சென்று நோட்டமிட்டு விஜயலட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றதை ஒப்புகொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட ரேவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 783

0

0