நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை..!

Author: kavin kumar
19 January 2022, 9:17 pm
Quick Share

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இன்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று அதிகமாக இருக்கக் கூடிய சூழலில் எப்படி தேர்தலை கையாளுவது, மறைமுக தேர்தல் எவ்வாறு கையாள்வது, தேர்தல் பணிக்கான நியமனங்கள் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 199

0

0