சீன்காட்ட குரங்கு போல் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்… கலெக்ஷன் முக்கியம் பிகிலு…தனியார் பேருந்தின் அட்ராசிட்டி!!(வீடியோ)

Author: Rajesh
19 April 2022, 5:58 pm
Quick Share

வேலூர்: தனியார் பேருந்தில் கூட்டம் கூட்டமாக தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் வழியாக ஆற்காடு வரையிலான வழிதடத்தில் போக்குவரத்திற்காக தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. திருவலம் பேருந்து நிலையமானது சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய பேருந்து நிலையம்.

இந்த பகுதியிலிருந்து இருந்து ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் தனியார் பேருந்தில் ஏறி பேருந்து படியில் மற்றும் பேருந்து பின்புறம் படியிலும் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான பயனம் செய்து வருகின்றனர். இதனை கண்டிக்க வேண்டிய பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இதனை கண்டுகொள்ளாமல் பேருந்தில் டிக்கெட் ஏறினால் போதும் என பேருந்தை அதிவேகமாக இயக்கி செல்கின்றனர்.

அதே சமயம் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் போதிய பேருந்து அந்த தடத்தில் இயக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எத்தனை பேருந்து இயக்கினாலும் படியில் தொங்கி பயணம் செய்வது குரங்கு போல் பின்பக்கம் தொங்கி சாகசம் செய்வது போன்ற செயல்கள் கல்லூரி மாணவர்கள் இடையே தன்னை ஒரு வீரனாக சித்தரித்து சீன் போடுவதற்காக என்கின்றனர் ஒரு தரப்பினர்.

எனவே மாணவர்களின் உயிரை கருத்தில் கொண்டு அந்த தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும் எனவும் இதுபோன்று படியில் தொங்கி சீன் காட்டும் மாணவர்களை அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் படியில் தொங்கி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 1136

0

0