திடீரென வந்த ஜேசிபி.. வீட்டை இடித்து தள்ளிய கொடூரம்… தவிக்கும் குடியிருப்புவாசிகள் : உரிமையாளர் உட்பட 10 பேர் தப்பியோட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 3:48 pm
Demolish
Quick Share

திடீரென வந்த ஜேசிபி.. வீட்டை இடித்து தள்ளிய கொடூரம்… தவிக்கும் குடியிருப்புவாசிகள் : உரிமையாளர் உட்பட 10 பேர் தப்பியோட்டம்!!

லால்குடி அருகே வேலாயுதபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் 35 வயதான சுப்பிரமணி பண்ணையாளரான ஜெயபால் அந்த காலத்தில் வயலில் வேலை செய்வதற்காக சில கூலி ஆட்களை நியமித்துள்ளார்.

அவர்களுக்கு தங்களுடைய களம் போர்ப்பட்டடி இடத்தில் குடும்பத்துடன் குடிசை அமைத்து தங்க அனுமதி அளித்துள்ளார். இவர்கள் கடந்த நான்கு தலைமுறையாக இந்த இடத்தில் கூலி வேலை செய்து வசித்து வருதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் காலமாகிவிட்டார். தற்போது அவர் மகன் சுப்ரமணி குடியிருந்தவர்களிடம் இடத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார் அதற்கு எங்களுக்கு மாற்று இடம் வேண்டுமென குடியிருந்த கூலித் தொழிலாளிகள் கூறியுள்ளனர்.

ஒரு சில குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் அந்த இடத்தில் குடிசை அமைத்து தங்கி உள்ளனர். நிலத்தின் உரிமையாளருக்கும் குடியிருந்தவர்களுக்கும் கடந்த சில வருடமாக இடத்தை காலி செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இது குறித்து வருவாய் துறை,காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் இருந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியர் இந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் வேலாயுதபுரம் கீழ தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான கோமதி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் குடும்பத்தினர் கடந்த 40 வருடங்களாக சுப்பிரமணி என்பவரின் வயல் காட்டில் வேலை செய்து வருவதால் கோமதியின் குடும்பத்திற்கு போதிய இடவசதி இல்லாததால் அவர் இடத்தில் குடிசை அமைத்து தங்க சொல்லி அனுமதித்துள்ளார். கோமதி என்பவர் அந்த இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்படி இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணி என்பவர் எனது இடத்தை காலி செய்து தருமாறு கூறியுள்ளார். அதற்கு கோமதி திடீரென்று இடத்தை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம். இடத்தை காலி பண்ண முடியாது.இவ்வளவு நாள் நாங்கள் இங்கேதான் இருந்தோம் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 9ஆம் தேதி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்து மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வேலாயுதபுரத்தில் உள்ள சுப்பிரமணி என்பவர் அடையாளம் தெரியாத 10 க்கும் மேற்பட்ட நபர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கோமதியின் குடிசை வீட்டை இடித்து தரைமட்டமாக்கி சேதப்படுத்தி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய ஜே சி பி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோமதி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிய சுப்பிரமணி மற்றும் அடையாளம் தெரியாத 10 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 290

0

0