8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

8 September 2020, 5:54 pm
Quick Share

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் , சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Views: - 0

0

0