இந்தோ-நேபாள விளையாட்டு போட்டி: தங்கம் வென்று பெருமை சேர்த்த வேதாரண்யம் இளைஞர்..!!

29 January 2021, 5:33 pm
nagai youngster
Quick Share

நாகை: நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாரண்யம் இளைஞர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் வசிஷ்ட் விக்னேஷ். இவர் சிறந்த நீளம் தாண்டும் வீரர் ஆவார். கடந்த 18ம் தேதி நேபாளத்தில் நடந்த சர்வதேச ரூரல் கேம்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற இந்தோ-நேபாள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.

இதில், நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்காக தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். தொடர்ந்து, போட்டிகள் முடிவடைந்து சொந்த ஊரான தேத்தாகுடி கிராமத்துக்கு வருகை தந்த அவரை ஊர் எல்லையில் ஏராளமான கிராம மக்கள் கூடி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், மாட்டு வண்டியில் அவரை சுமார் 2 கிலோ மீட்டர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து பேசிய வசிஷ்ட் விக்னேஷ், ‘ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம்’ என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0