தமிழக தேர்தலில் 1.55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு மெஷின்கள் பயன்படுத்தப்படும் : தேர்தல் ஆணையம்

29 March 2021, 6:17 pm
sathyapratha sahoo - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 1.55 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் 1.55 லட்சத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், வாக்குப்பதிவு தடைபடாமல் பிரச்சனையை சரிசெய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுககு தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போடும் வசதி ஏற்படுத்தி தரப்படும். தமிழகம் முழுவதும் இதுவரையில் ரூ.319 கோடி ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர், என தெரிவித்தார்.

Views: - 18

0

0