சரிந்து போன மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகள்… மக்களின் உயிரில் அலட்சியமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 2:22 pm
Quick Share

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில் மின்கம்பத்திற்கு கயிறு கட்டி மின்வாரிய அதிகாரிகள் பாதுகாத்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கேசரிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பவானி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சித்தார் பேருந்து நிறுத்தம் பகுதியில், கடந்த சில தினங்களாக பவானி – தொப்பூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற வரும் நிலையில், அந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமை பெறாத நிலையில், கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் உள்ள மின்கம்பம், பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒரு புறமாக சாய்ந்து காணப்படுகிறது.

இதனை அப்புறப்படுத்தி, வேறு கம்பத்தை நட்டு சீரமைக்காத மின்வாரிய ஊழியர்கள், அந்த கம்பத்திற்கு கயிறு கட்டி கடந்த சில தினங்களாக பாதுகாத்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு அலட்சியத்துடன் செயல்படக்கூடிய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 297

0

0