டிப்பர் லாரியை மறித்து ஓட்டுநரை மிரட்டி பணம் கேட்ட வருவாய் ஆய்வாளரின் கணவர் : இப்ப இவங்களும் கிளம்பிட்டாங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 6:33 pm
RI husband - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் எம்.சேண்ட் மணல் ஏற்றிக்கொண்டு புளியம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது முல்லைநகர் கிராமத்தில் டிப்பர் லாரியை நிறுத்திய போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபாவின் கணவர் கோவிந்தராஜ் (வயது 53) போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் கூறி மிரட்டியதாக கூறபடுகிறது.

இதில் முறையான ஆவணங்கள் அனைத்தையும் ஓட்டுனர் காண்பித்த பிறகும், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முல்லைநகர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு வருவாய் ஆய்வாளர் என கூறிக்கொண்டு ஒருவர் டிப்பர் வாகனத்தை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார். மேலும் அவரது வண்டியில் பிரஸ் என்று உள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி நேரில் விசாரணை நடத்தியதில் இவர் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளரின் கணவர் எனவும், மேடம் அலுவலகத்தில் வேலையாக இருக்கின்ற காரணத்தால் என்னை வாகன சோதனையில் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து கோவிந்தராஜ் வந்த பிரஸ் ஸ்டிக்கர் கொண்ட இருசக்கர வாகனத்தையும், கோவிந்தராஜையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டுவந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா அவர்களிடம் கேட்டபோது, நான் DRO மீட்டிங்கில் இருந்தேன், அப்பொழுது வடமலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியை வாகன உரிய அனுமதியின்றி செல்லும் வாகனத்தை கண்காணிக்க சொன்னேன் அவ்வழியாக வந்த எனது கணவர் நிறுத்தி அதற்குள் கேட்டுவிட்டார்.

எனது வண்டி பழுது ஏற்ப்பட்டு மொக்கனிக் ஷாப்பில் உள்ளது அதனால் எனது கணவரின் நண்பர் ஒருவரின் வண்டியை வாங்கி வந்தோம் எனது போனில் சார்ஜர் இல்லை பிறகு கூப்பிடுறேன் என அழைப்பை துண்டித்தார்.

Views: - 662

0

0