தமிழகத்தில் ஊடுருவிய உருமாறிய கொரோனா.. அதிகரிதத் பாதிப்பு : தமிழக சுகாதாரத்துறை அலர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2023, 5:25 pm
Quick Share

தமிழகத்தில் ஊடுருவிய உருமாறிய கொரோனா.. அதிகரிதத் பாதிப்பு : தமிழக சுகாதாரத்துறை அலர்ட்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தின் படி இந்தியாவில் 312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 4 பேருக்கு JN-1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு JN-1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவாவில் 34 பேருக்கும் மகாராஷ்டிராவில் 9 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் வலியுறுத்தியிருக்கிறார்.

உலகளவில் அதிகம் பரவும் JN1 வகை கொரோனா தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Views: - 213

0

0