திருமண கோலத்தில் வந்து மரக்கன்றுகள் நட்ட புதுமண தம்பதிகள்
21 August 2020, 8:47 pmஅரியலூர்; திருமானூர் அருகே திருமண கோலத்தில் வந்து மரக்கன்றுகள் நட்ட புதுமண தம்பதிகளின் செயலுக்கு பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுகரசு. கிராம நிர்வாக அலுவலராக அரசு பணி செய்து வரும் இவர் மரங்கள் வளர்ப்பது, நூலகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு தனது கிராமத்தில் உள்ள வண்ணான்குளம் ஏரிக்கரையில் மணக்கோலத்தோடு வந்து மரக்கன்று நட்டு வைத்தார். புதுமண தம்பதிகளின் இந்த செயலுக்கு பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. நிகழ்ச்சியை மரங்களின் நண்பர்கள் குழு மற்றும் இயற்கை ஆர்வலர் தங்க.சண்முகசுந்தரம் ஏற்பாடு செய்து இருந்தனர்.