வாங்கிய வாழைப் பழத்துக்கு பணம் கேட்ட வியாபாரிக்கு கத்தரிக்கோலால் குத்து : வடமாநில வாலிபரை வதக்கி எடுத்த மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 7:32 pm
Blood
Quick Share

வாங்கிய வாழைப் பழத்துக்கு பணம் கேட்ட வியாபாரிக்கு கத்தரிக்கோலால் குத்து : வடமாநில வாலிபரை வதக்கி எடுத்த மக்கள்!

விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த ( கேரளா) 3 பேர் பணம் இல்லாமல் வாழைப்பழம் கேட்டுள்ளனர், அவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்தனர்.

மேலும் வாழைப்பழக்கடை காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், அந்த சமயத்தில் விழுப்புரம் மருதூரை சேர்ந்த சரவணனின் நண்பரான காமராஜ் உள்ளிட்ட 2 பேர் அங்கு வாழைப்பழம் வாங்க வந்தனர்.

அப்போது அவர்கள் வெளி மாநிலத்தவர் தகராற்றில் ஈடுபட்டது கண்டு அவர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர், அவர்களுக்கும், வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வாழைப்பழ வியாபாரி சரவணன், இங்கு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள், வேறு எங்காவது செல்லுங்கள் என்று கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த வெளிமாநில வாலிபர்களில் ஒருவர், அவன் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தியதில் பலத்த காயமடைந்தார். இதை தடுக்க வந்த கமாராஜையும் அந்த வடமாநில வாலிபர் குத்தினார்.

இதில் காயமடைந்த 2 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் படிக்க: அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தி குறித்து செல்லூர் ராஜு பதிவு : மாணிக்கம் தாகூர் ரிப்ளை!

அதற்குள் வெளிமாநில வாலிபர்கள் 3 பேரில் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை பிடித்து பொதுமக்கள் தருமடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர், போலீசார் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதல் சிகிச்சை கொடுத்து அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் விழுப்புரத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த இரண்டு பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Views: - 279

0

0