‘தைரியமான ஆம்பளையா இருந்தா வாங்கடா’ : அரசுப் பேருந்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி கலாட்டா செய்த பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2021, 11:02 am
Dgl Drunken Woman -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஈரோட்டில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கலாட்டா செய்த குடிபோதை பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் கரூர் பேருந்து நிலையத்தில் சாந்தி என்ற பெண் குடிபோதையில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய பெண் பேருந்துக்குள் தகாத வார்த்தைகளால் பேசியும் பெரும் கலாட்டாவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

அவரை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆண் பயணிகளை தகாத வார்த்தைகளால் கடுமையாக சாடியுள்ளார். இதனால் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் செய்வதறியாது திகைத்தனர்.

பேருந்து செல்லச்செல்ல குடிபோதை பெண்ணின் ஆக்ரோசம் அதிகரித்தது இதனால் வேறுவழியின்றி வேடசந்தூர் வந்த பேருந்தை காவல் நிலையத்திற்கு செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பின்பு ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு பேருந்தை இயக்கினார் அங்கு பேருந்திலிருந்து பெண்ணை காவல்துறையினரிடம் பயணிகள் ஒப்படைத்தனர் காவல் நிலையத்திலேயே காவல்துறை முன்பாகவே பெண் தகாத வார்த்தைகளால் பேசி கலாட்டா செய்ததால் காவல் நிலையம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது

காவல்துறையினர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அரசு பேருந்தில் மது போதையில் ஏறிய பெண் கலாட்டா செய்து வந்த நிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்த பின் பயணிகள் நிம்மதி அடைந்தனர்

காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைத்தனர்.

Views: - 335

0

0