வாகனத்தை காலால் இயக்கிய வாலிபர்! வைரலான வீடியோவால் சர்ச்சை!!

28 August 2020, 5:13 pm
Vehilce Leg Viral- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தக்கலை அருகே தனக்கு சொந்தமான கேப் வாகனத்தில் குத்துப்பாட்டு பாடி ஆட்டம் போட்டு வந்த ஓட்டுநர் வாகனத்தை காலால் இயக்கிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவர் சொந்தமாக கேப் வாகனம் ஒன்றை வைத்து வாடகைக்கு வைத்து ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் அவர் அந்த மேக்சி கேப் வாகனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் குத்து பாட்டை இசைக்கவிட்டு காலால் வாகனத் ஓட்டி வந்துள்ளார். நண்பர்களுடன் இரவு போக்குவரத்து நெரிசல் நிறைந்த தக்கலை அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதை உடன் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சையாக மாறியுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி போக்குவரத்து நெரிசலான தக்கலை அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் சாகச பயணத்தில் ஈடுபட்ட பிரிட்டோ மீது தக்கலை போக்குவரத்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 34

0

0