வெளிமாநில பக்தர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம்… கல்லா கட்டும் அண்ணாமலையார் கோவில் ஊழியர்கள் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 8:29 pm
Quick Share

ஆயிரக்கணக்கான ரூபாய்களை பணம் பெற்றுக் கொண்டு வெளிமாநில பக்தர்களை சாமி தரிசனம் செய்ய குறுக்கு வழியில் கோவில் ஊழியர்கள் அனுப்பும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் வெளிமாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஆக விடுமுறை நாட்களிலும் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களிலும் பல லட்சம் பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையை கிரிவலம் வருவது வாடிக்கையாக ஒன்றாக உள்ளது.


குறிப்பாக, கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் அனுதினமும், வார விடுமுறை நாட்களிலும் சாமி தரிசனம் செய்ய அண்ணாமலையார் கோவிலுக்கு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த வெளி மாநில பக்தர்களிடமிருந்து கோவில் ஊழியர்கள் பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 5 முதல் ஆறு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள் மத்தியில் பணத்தை பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய வைத்த கோவில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, அண்ணாமலையார் கோவிலின் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை, வெளி மாநில பக்தர்களை தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் தாங்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய வேண்டி கோயில் ஊழியர்களை சில புரோக்கர்களின் மூலம் அவர்களும் மக்களிடம் இருந்து பணம் பெற்று குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக பெரும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மூன்று மாநிலங்களில் இருந்து வரும் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் பணக்காரர்கள், மற்றும் வசதி மிக்கவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை ஊழியர்களிடம் அளித்து கோவிலின் கருவறையின் உள்ளே சென்று அமர்ந்து தரிசனம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாக அண்ணாமலையார் கோவிலில் மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 332

0

0