திமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு இதுதான் காரணம் : ரகசியத்தை உடைத்த வைகோவின் மகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 8:04 pm
Durai Vaiko - Updatenews360
Quick Share

கோவை : திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளதாகவும் வைகோவின் மகனும் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை வி.கே. மேனன் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு 80சதவீதம் உள்ளது. மதிமுக 90 சதவீதம் வெற்றி பெரும். இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போதுமானதாக இல்லை. திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளோம். நாங்கள் கடந்த எட்டு மாதத்தில் முதல்வர் செய்த சாதனைகளையும் கடந்த ஆட்சியில் செய்யத் தவறிய செயல்களையும் கூறி வாக்கு சேகரிக்க உள்ளோம்.

கடந்த ஆட்சியில் 5 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யாமல் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி தமிழகத்திற்கு வரவில்லை.

தொண்டர்களின் நிர்ப்பந்தத்தினால் தான் கட்சியில் உள்ளேன். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு செய்தது சாத்தியப்படாது. உடை அணிவது அவரவர் உரிமை ஹிஜாப் அணிவது பல ஆண்டு காலங்களாக இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் ஒன்று.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூயஸ் குடிநீர் திட்டத்தை எதிர்க்கிறேன். அதேசமயம் பல பணிகள் இதில் நிறைவேற்றப்பட்டதால் இதனை தற்பொழுது நிறுத்துவது என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நீட் தேர்வினால் பல அரசுப் பள்ளி மாணவர்கள் மலைவாழ் மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குச் சென்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அது தமிழக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு காரணமாக தான் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிக்குச் சென்றார்களே தவிர நீட் தேர்வினால் அல்ல.

அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குப் போகக்கூடாது என்ற கொள்கையைத்தான் பாஜக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 708

0

0