தூத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையை நடத்தி வந்த தொழிலாளி படுகொலை : சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 4:44 pm
Tuticorin Murder - Updatenews360
Quick Share

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்த தொழிலாளியை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி சாத்தான் குளம் புதுகுளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (வயது 47). இவர் மனைவி சங்கரிக்கு 2 பெண் குழந்தைகள்.

இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சிறியதாக குடிசை கட்டி நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். தூத்துக்குடி 3ம் மைல் அருகில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் இவர், இன்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் மர்மமாக இறந்து கிடந்தார்.

இதை அருகில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி டவுன் பொறுப்பு உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 568

0

0