ரூ.85 ஆயிரத்துக்கு 10 மாத ஆண் குழந்தையை விற்ற தாய் : குழந்தையை மீட்ட போலீசார்…

Author: kavin kumar
13 January 2022, 3:42 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றத்தில் 10 மாத ஆண்குழந்தையை பணத்திற்காக விற்ற தாய் உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் 23 வது தெரு சார்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய 10 மாத ஆண் குழந்தை முத்துராஜை செங்குன்றம் நாரவாரிகுப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வம், தங்கம் தம்பதியினருக்கு ரூபாய் 85 ஆயிரத்துக்கு விஜயலட்சுமி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து தங்கம் அந்த குழந்தையை செங்குன்றம் காமராஜர் நகரை சேர்ந்த பாண்டுரங்கன், நவநீதம் தம்பதியினருக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், 10 மாத குழந்தையை மீட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தையை விற்ற தாய் விஜயலட்சுமி, பணம் கொடுத்து வாங்கிய நவநீதம், புரோக்கராக செயல்பட்ட தங்கம் ஆகிய மூன்று பேரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Views: - 232

0

0