திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு களைகட்டியது : களத்தில் 1000காளைகள், 600 காளையர்கள்!!

31 January 2021, 10:04 am
alagumalai jalli- Updatenews360
Quick Share

திருப்பூர் : அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் இதில் 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விழாவினை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில், 4-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. விழாவுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலகுமலை அடிவாரத்தில் வாடிவாசல் மற்றும் 400 அடி நீளத்தில் வாடிவாசலில் இருபுறமும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு காயம் படாமல் இருக்க தேங்காய் நார் (மஞ்சு)தரையில் தூவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் போட்டியை காண வரும் விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த வரும் வழிகளில் வாகன நிறுத்தங்கள் போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு கொண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 1040 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்த காளைகள் நேற்று காலை முதலே வரத்தொடங்கின.

இந்த காளைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றுடன் வந்தால் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளுக்கும் பரிசாக 2 மொபட்டுகள், பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் சார்–பில் 400 அண்டாக்கள், வேட்டி, துண்டு,டி-சர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தை சுற்றிலும் 6 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி கழிப்பிட வசதி ஆகியன செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0