எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு பரவிய கச்சா எண்ணெய் படலம் : உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை

Author: Babu Lakshmanan
16 December 2023, 4:21 pm
Quick Share

சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எண்ணூர் உப்பங் கழி கடற்கரை பக்கிம்கம் கால்வாய் பகுதிகளில் கலந்த தொழிற்சாலை கழிவுகள் கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அது மெல்ல பரவி பழவேற்காடு கோரை குப்பம் முதல் வைரவன் குப்பம் வரை கடற்கரை ஓரங்களில் பரவி உள்ளது.

இதனால் மீன்பிடி படகுகள் வலைகள் சேதம் அடையும் நிலை உள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் சில மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கிறது.

புயல் கனமழை காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டு மீன் பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் படலம் பரவி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்ததார்.

அவரிடம் எண்ணெய் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.

Views: - 179

0

0