தமிழகத்தில் 5 மாவட்டங்களில் “கொரோனா அலர்ட்“!! முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட உத்தரவு!!
11 September 2020, 7:38 pmதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் என்பதால் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் ஆரம்ப காலத்தில் அதிகரித்து வந்த சூழ்நிலையில், தமிழக அரசின் துரித நடவடிக்கையால் தொற்று பரவுவது குறைந்து காணப்பட்டது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சீரடைந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கொரோன உச்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றும் 10 அல்லது 15 நாட்களில் உச்சம் தொடும் அச்சம் உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனால் அந்ததந்த மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை தீவிரப்படுத்த வேண்டும் என்று, மையங்களை அதிகரித்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தலைமைச் செயலாளர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை தயார் படுத்த வேண்டும் என்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், 5 மாவட்டங்களுக்கு வந்து செல்வோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0
0