பூத் சிலிப் கொடுக்கும் போதே பணம் கொடுத்துட்டாங்க ; திமுக மீது சூர்யா சிவா குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 7:55 pm
Quick Share

திருச்சி : பூத் சிலிப் கொடுக்கும் போதே திமுகவினர் பணம் கொடுத்து விட்டதாக பாஜக நிர்வாகி சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 19 ஆம் தேதியான இன்று பாராளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்காளர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடியில் ஆர்வமாக வாக்கு அளித்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் வெஸ்ட்ரி பள்ளியில்‌ உள்ள வாக்கு சாவடி மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி பிரிவின் மாநில செயலாளர் சூர்யா சிவா வாக்களித்தார்.

மேலும் படிக்க: இறந்தவருக்கு ஓட்டு இருக்கு… உயிரோட இருக்கும் மனைவிக்கு ஓட்டு இல்ல… மறுதேர்தல் அவசியம் ; அண்ணாமலை

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில சிறுபான்மையினர் பிரிவின் செயலாளர் சூர்யா சிவா கூறியதாவது :- தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு மாற்றத்திற்காக தயாராக இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவில் அது கண்டிப்பாக தெரியும். 400 இடங்களைப் பெற்று மீண்டும் மோடி பிரதமராக ஆட்சி அமைப்பார்.
தமிழகத்திலிருந்து குறைந்தது. 10க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு வலுசேர்ப்பார்கள்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறு‌த்தவரை எந்த கட்சியினரும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லை. திமுக‌ கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மட்டுமே வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார் என தகவல் கிடைத்தது.

திராவிட கட்சிகள் பணத்தை வைத்து வாக்கை வாங்கலாம் என்ற எண்ணம் உள்ளது
பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பணம் வேண்டாம் என்று புறக்கணித்து உள்ளனர்.
தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்குக்கு பணம் வழங்கவில்லை.
பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், எனக்கூறினார்.

கோவையில் G Pay மூலமாக பாரதிய ஜனதா கட்சியினர் பணம் கொடுத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணையத்திடம் அப்படி புகார் கொடுத்துள்ளனர். இவர்களே இவ்வளவு தெளிவாக கொடுக்கும் போது பாஜகவினர் Gpayவில் கொடுப்போமா, கொடுக்க வேண்டும். முடிவு செய்தால் எப்படி வேண்டாலும், வேண்டுமானாலும் கொடுக்கலாம், என பேசினார்.

கோவையில் நான் பிரச்சாரம் செய்த போது பூத் சிலிப் கொடுக்கும் போதே பணத்தை திமுகவினர் கொடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினார். தேர்தல் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என தெரிவித்தார்.

Views: - 105

0

0

Leave a Reply