உயிலுக்கு உயிர் கொடுக்க தந்தையைக் கொல்ல முயற்சி : மீட்கச் சென்ற போலீசாரை மிரட்டும் மகன்!!

12 October 2020, 3:25 pm
Wealth Issue - Updatenews360
Quick Share

ஈரோடு : முதியவர்கள் என்றும் பாராமல் சொத்துக்காக தாய் தந்தையை அடித்து துன்புறுத்தி தரதரவென இழுத்துச் செல்லும் மகனின் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வாய்க்கால் பகுதி கோய தோட்டத்தில் வசிக்கும் விவசாயி பழனிகவுண்டர். இவருடைய மகன் பொன்னுசாமி என்பவர் தன் தந்தை சம்பாதித்த சொத்தை தன் பெயரில் உயில் எழுதிவிட்டு பிறகு தந்தையை கொன்று விட்டு உயிலுக்கு உயிர் கொடுப்பதாக திட்டம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த திட்டம் பொன்னுசாமியின் சகோதரிகளுக்கு தெரிய வர, பதறிப்போன பழனிகவுண்டரின் மகள் மற்றும் பேத்திகள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை மீட்டு வரச் சென்றனர்.

அப்போது மகன் பொன்னுசாமி தனது தந்தையை அனுப்பி வைக்க மறுத்து தந்தை இழுத்து சென்றுள்ளார். வயதான தந்தை என்று பாராமல் அவர் இழுத்து சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நடந்து கொள்ளும் இதுபோன்ற செயல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்துவதுடன் ஒரு தனி மனிதனின் சுய விருப்பத்திற்கு மாறாக காவல்துறையையும் உன் வேலையை பாரு என்று கூறிவிட்டு தந்தையையும் தாயையும் அடித்து அமரவைத்து சொத்து பிரச்சனை பேசி முடிந்த பிறகு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடைசி காலத்தில் இருக்கும் பெற்றோர்களை பக்குவமாக கவனிக்க வேண்டிய மகன், சொத்துக்காக தந்தையையும் தாயையும் கொடுமைப்படுத்தும் காட்சி காண்போர் கண்கணை கண்ணீர் குளமாக்கியுள்ளது.

Views: - 45

0

0