சினிமாவில் களம் இறங்கும் ஷாருக்கானின் மகள் : வாரிசு நடிகர்களுக்கு எதிராக கொதித்தெழுந்த ரசிகர்கள்..!

Author: Rajesh
14 May 2022, 7:48 pm
Quick Share

இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். இருவருக்கு இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இவர் முதன்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் லைன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த திடீரென சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் மகள் சஹானா கான் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். The Archies என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் தான் சஹானா கான் நடித்துள்ளார்.

அப்படத்தில் சஹானா கானுடன் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் நடித்துள்ளார். இதனால் தற்போது இணையதள வாசிகள் வாரிசு நடிகர்களுக்கு எதிராக #Nepotism என்ற ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்று விமர்சனங்கள் இருக்கும் நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிக்க வந்துள்ளது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 604

0

0