கோவையில் கார், பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது! கடத்தல் காரில் வலம் வந்த போது சிக்கினர்!!

10 November 2020, 8:11 pm
Bike Theft Arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் கார் மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை இடையார்பாளையம் வடவள்ளி சாலையில் துடியலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கார் ஒன்றில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 28), என்பதும் தங்கமணி (வயது 27) என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் அவர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கோவையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் திருடிய வாகனங்களை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Views: - 26

0

0