கால்நடை பராமரிப்பு உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு… மாடு மேய்த்தும், சைக்கிள் ஓட்டியும் காட்டிய விண்ணப்பதாரர்கள்..!

Author: Babu Lakshmanan
20 April 2022, 2:40 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி, நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 500க்கும் மேற்பட்ட திரண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்கு 48 காலி பணியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்திருந்தது. இதனையொட்டி இன்று முதல் பத்து நாட்கள் நேர்முகத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இத்தேர்வில் கலந்து கலந்து கொள்ள 5906 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று முதல் நாளில் 500க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வருகை தந்ததால், அந்த சாலை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் வருகை தந்த இளைஞர்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான தேர்வில் சைக்கிள் ஓட்டும் பயிற்சி,கால்நடை மாடு மேய்த்தல் பயிற்சி நடைபெற்றது.

மேலும், தொடர்ந்து 10 நாட்கள் நேர்முக தேர்வு நடைபெறும் எனவும், 5906 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 48 காலி பணியிடங்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது என மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Views: - 680

1

0