நயன்தாரா பக்கத்துல உக்காந்தா போதும்.. விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..!

Author: Rajesh
1 June 2022, 11:01 am
Quick Share

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட, நயன்தாரா திருமண வேலைகள் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்தார் என கூறப்பட்டது.இதனிடையே, மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் இருவம் கார் மூலம் விக்னேஷ் சிவனின் சொந்த ஊருக்குச் சென்றனர். பின்னர் இருவரும் கோயிலில் நேர்த்திகடனை செலுத்தினர்.

தற்பொழுது மகாபலிபுரத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் நடந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர் மேலும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் அளித்த ஒரு போட்டியில், நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவுக்கு கதை சொல்லும் போது நிகழ்ந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியதாவது, நயன்தாராவுக்கு கதை சொல்ல ஆட்டோவில் தான் சென்றேன் என்றும், கதை பிடிக்குதோ..? இல்லையோ..?நயன்தாரா பக்கத்தில் ஒரு மணி நேரம் பக்கத்தில் உக்காந்தாலே போதும் என்று நினைத்து கொண்டு சென்றதையும் அந்த போட்டியில் கூறியுள்ளார்.

Views: - 860

6

1