கரூர்-ல நீங்களா போட்டியிடுறீங்க…? ஜோதிமணி எங்கே..? திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 7:03 pm
Quick Share

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது யார் காந்தி ராஜனா..? ஜோதிமணி ஏன் வரவில்லை என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.முன்னதாக, கிராமப் பெண்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மோர்பட்டி, சித்துவார் பட்டி, பாலக்குறிச்சி, வடுகப்பட்டி, கொம்பேறிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேரடியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

மேலும் படிக்க: மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்கள் அடைப்பு… திமுக மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

அப்போது, வடுகபட்டியில் சாலை வசதி நீண்ட நாட்களாக இல்லை என்று கூறி வருகிறோம் என்று காந்தி ராஜனிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு விளக்கம் அளித்த காந்திராஜன், தங்கள் பகுதிக்கும் சேர்த்துதான் ரோடு போடுவதற்கு பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அரசு அதிகாரியாக பணிபுரிந்த ஆனந்தன் என்பவர் அதில் 15 கோடி ரூபாயை வேறு பகுதிக்கு ரோடு போட எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டார். அதனால் தான் இப்போதைக்கு சாலை போட முடியவில்லை. நான் அமைச்சரிடம் கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை வைத்துள்ளேன், என்று கூறினார்.

பின்னர், பெண் ஒருவர் பேசுகையில்,  நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடுகிறாரா..? வேட்பாளர் ஜோதிமணி வராமல் இவர் எதற்கு வருகிறார்..? என்று கேள்வி எழுப்பினார்.

வெற்றி பெற்று ஜோதிமணி தொகுதி பக்கமே நன்றி தெரிவிக்க கூட வரவில்லை. இப்போது ஓட்டு கேட்கவும் வரவில்லை. ஊருக்குள் வரட்டும். அப்போது, பார்த்துக்கொள்கிறோம், என்று பெண் ஒருவர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 236

0

0