திமுகவினர் Hot Box, பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க : ஆனால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.. எடப்பாடி பழனிசாமி பரப்புரை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 5:28 pm
Cbe edappadi - Updatenews360
Quick Share

கோவை : ஹாட் பாக்ஸ் கொடுத்த வாங்கிக்கோங்க தப்பே இல்ல ஆனா ஓட்டை மட்டும் அதிமுகவுக்கு செலுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசினார்.

கோவையில் நடத் அதிமுக பிரச்சார கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

பின்னர் அவர் பேசியதாவது : முதலமைச்சர் ஸ்டாலின் 8 மாத காலத்தில் நாட்டு மக்களுக்கும், கோவை மக்களுக்கும் என்ன செய்தார். திட்டம் நிறைவேற்றுவது போல் தோற்றத்தை வைத்து ஆட்சி நடத்துபவர் ஸ்டாலின்.

அம்மா சிமெண்டை வலிமை சிமெண்ட் என்று மாற்றி, விலையை ஏற்றி 450க்கு விற்கிறார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. குட்கா லோடு லோடாக பிடிக்கின்றனர். சூப்பர் முதலமைச்சர் என்று தனக்கு தானே பேசிக்கொள்கிறார்.

அதிமுக ஆட்சியில் கோவை அமைதி பூமியாக இருந்தது. இப்போது கலவர பூமியாக மாற்ற திட்டம் போடுகின்றனர். அதிமுக ஆட்சியில் நேரடியாக திட்டம் மக்களை நேரடியாக சென்றடைந்தது. ஆனால் இப்போது அந்த கட்சியின் குடும்பத்திற்கு தான் செல்கிறது.

கோவை மாவட்டத்திற்கு தற்போது ஒரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். 5 கட்சிக்கு சென்று வந்தவர் அவர். திள்ளுமுள்ளுகள் செய்ய தான் அவரை நியமித்துள்ளார்.

அடிக்கடி மின் வெட்டு வருவது குறித்து கேட்டால் அணிலை கைகாட்டும் அமைச்சர் தான் இவர். மின் தடை தற்காலிகமாக ஏற்படுவது, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

கோவை தொழிற்சாலை நிறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் தேவை. அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுத்தோம்.

தொழில்வளம் பெருகியது. பொருளாதரம் வளர்ந்தது. ஆனால், இன்று மக்கள் தொழில் புரிபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பொருளாதாரம் பின்தங்கி வருவதற்கு காரணம் மின்வெட்டு. 8 மாத காலத்தில் மின் சாரம் முறையாக உற்பத்தி செய்யப்படவில்லை.

கிட்டத்தட்ட 70 லாரிகளில் ஹாட்பாக்ஸ் இறக்கியுள்ளார் அணில் அமைச்சர். கொடுத்தா வாங்கிக்கோங்க தப்பே இல்லை. கொள்ளை அடித்த பணம் தானே. ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போடுங்கள்.

குனியமுத்தூரில் கரூர் மற்றும் சென்னையை சேர்ந்த திமுகவினர் ஹாட்பாக்ஸ் கொடுக்கின்றனர். அப்போது பேராசிரியர் கல்யாண சுந்தரம் இதை தட்டிக்கேட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் உள்ள காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். குற்றவாளிக்கு துணையாக போகிறார்கள். ஏவல்துறையாக தான் செயல்படுகின்றது.

அதிமுக ஆட்சியின் போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆனால், இப்போது கூலிப்படை, காவல்துறை மூலம் கழக வேட்பாளர்களை மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது தான் வேலையா.?

இந்தியாவில் சிறந்த காவல்துறையாக உள்ள காவல்துறை திமுகவின் எடுபுடியாக உள்ளதை மாற்றிக் கொள்ளுங்கள். தரம் தாழ்ந்து போனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

திமுக குறித்து எழுதினால் பத்திரிகையாளர் மீது வழக்கு போடுகிறார்கள். தில்லு, திராணி இருந்தால் தேர்தலில் வெற்றி பெறுங்கள் பொய் வழக்கு போடுவதை வைத்து மிரட்டுவதாக நினைத்தால் , எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

கலவரம் செய்து ஆதாயம் தேட முயற்சித்தால் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சட்டத்திற்கு குந்தகம் ஏற்பட்டால் சரி செய்யவும் தயங்க மாட்டோம். நான் பச்சை பொய் பேசுவதாக ஸ்டாலின் கூறுகிறார். நானா பொய் பேசுகிறேன். நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் 525 திட்டங்களை அள்ளிவிட்டீர்கள்.

இந்தியாவில் எந்த கட்சியும் இவ்வளவு அறிவிப்பு விட்டது இல்லை. மக்கள் எதிர்பார்த்து வாக்களித்த்னர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன நடந்தது? எதுவும் நடக்கவில்லை.

எங்கு சென்றாலும் நான் கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன் என்கிறார் ஸ்டாலின். யார் இல்லை என்றார்.? செய்யாத காரணத்தால் தான் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

பெண்களுக்கு உரிமை தொகை கொடுக்கிறேன் என்றார்கள். ஆனால் இல்லை. பிறகு எதற்கு சொன்னதை செய்வேன் என்று மார்தட்டுகிறீர்கள். உதயநிதி ஸ்டாலினிடம் ஒருவர் பெண்களுக்கான தொகை குறித்து கேட்க, இன்னும் நான்கு வருடம் இருக்கு ஏன் அவசரப்படுகிறீர்கள் என்கிறார். கல்விக்கடன் ரத்து என்றனர் செய்யவில்லை.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறத்தது. ஆனால் மாநில அரசு குறைக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடி என்றார். கவர்ச்சிகரமாக திட்டம் அறிவித்தார். 5 சவரனுக்குகீழ் உள்ள நகைகளுக்கான கடன் தள்ளுபடி என்றார்.

ஓடுங்க அடமானம் வைய்யுங்க என்றார் உதயநிதி. நம்பி மக்கள் அடமானம் வைத்தனர். இப்போது, தகுதியானவர்களுக்கு தான் தள்ளுபடி என்கின்றனர். அடகு வைத்த 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் தகுதி என்கிறார்கள். 35 லட்சம் பேர் பரிதாப நிலையில் உள்ளனர். அந்த குடும்பம் ஸ்டாலினை மறக்க மாட்டார்கள்.

நீட் தேர்வு குறித்து பேசுகிறார் ஸ்டாலின். 2010ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆண்டது. அப்போது தான் நீட் தேர்வு வருகிறது. இதுகுறித்து விவாதம் செய்ய தயாரா என்றார் ஸ்டாலின். நான் தயார் என்றும் கூறினேன். ஆனால் இதுவரை பேச்சே இல்லை.

இந்த தேர்வை ரத்து செய்ய பல சட்ட போராட்டங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெ., முன்னெடுத்தார். நீட் ரத்து குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், மறு சீராய்வு மனு போட்டு நீட் தேர்வை கொண்டு வந்தனர்.

இது குறித்து எங்கு சவாலுக்கு கூப்பிட்டாலும் நான் வர தயார். தர்மம் நீதி உண்மை தான் வெல்லும். இங்குள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும். கோவை அதிமுக கோட்டை என்பதை நிரூபித்து காட்டுங்கள்.

Views: - 859

0

0