பொங்கல் பரிசை வாங்க முடியாதவர்களுக்கு “இனிப்பு செய்தி“ : அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்..

By: Udayachandran
2 January 2021, 1:41 pm
Minister Sellur-Updatenews360
Quick Share

மதுரை : பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை கழித்தும் பொங்கல் பரிசை வாங்கலாம் என அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் மதுரை மாநகராட்சி தூய்மை பணிக்கு 55 இலட்சம் மதிப்பில் 200 மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் “தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை வருகிறது என தகவல் தான் என்றும் அதிலிருந்து மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வரும் 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது, தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை கழித்தும் பொங்கல் பரிசை வாங்கலாம் என்று கூறிய அவர், இந்த திட்டம் மூலம் 2 கோடியே 6 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என தெரிவித்தார்.

திமுகவில் உழைத்து பயன் அடையாதவர்களை மு.க.அழகிரி அழைத்து உள்ளார், ஊடகத்தில் செய்தி வர வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் நாள்தோறும் பேசி வருகிறார், திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத அளவிற்கு அதிமுக சாதனை படைத்துள்ளது. முதல்வருக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள் என கூறினார்.

அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே எந்தவொரு விவாதமும் இல்லை, தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணி கட்சியை அழைத்து பேசுவோம், திமுக கிராம சபை கூட்டத்திற்கு 200 அல்லது 300 ரூபாய் கொடுத்து மக்களை அழைத்து வருகிறார்கள். திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழகத்தை ஆளும், வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என கூறினார்

Views: - 50

0

0