குறையவே குறையாத ஆக்ரோஷம்… வேட்டை தடுப்பு காவலரை கொடூரமாக தாக்கிய காட்டு யானை ; அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
15 June 2022, 1:04 pm
Quick Share

கோவை : கோவை தீத்திபாளையம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள நபரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் என்ற கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக குட்டிகள் உட்பட 6 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் சுற்றி வருகின்றன. குட்டைதோட்டம் அருகில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த யானை கூட்டம் புகுந்தது.

அப்போது யானைகள் பயிர்களை சேதம் செய்ததோடு, அவரது வீட்டு கதவுளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த 6 யானைகள் அதிகாலையில் காளம்பாளையம் பகுதியில் உள்ள மலையடிவார வனப்பகுதிக்கு சென்றன. அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து, வழிதவறி குடியிருப்புகளுக்குள் நுழைந்தது.

அந்த யானையை விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அதேவேளையில், வனத்துறையினரின் செயல்களை பார்த்து மிரண்டு போன அந்த காட்டு யானை, ஆக்ரோஷமாகவே காணப்பட்டு வருகிறது. எந்த நேரமும் பொதுமக்களை தாக்கல் என்ற நிலையில், யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காட்டு யானை அங்கு உள்ள நபரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடனடியாக அருகிலிருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் கூச்சலிடும் அவரை மீட்டனர். சரியான நேரத்தில் யானையை விரட்டியதால், உயிர்சேதம் ஆகவில்லை. இருந்தபோதிலும் காயமடைந்த நிலையில், அவரை கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் மதுக்கரை வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு வீரர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது.

Views: - 546

0

0