பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம் : மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கணவன் பரபரப்பு புகார்!

Author: Babu Lakshmanan
21 March 2023, 11:13 am
Quick Share

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கணவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் பிரேம்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:- கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 25.06.2021 அன்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட எனது மனைவி சுபா, மறுநாள் மதியம் ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்தது. பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் எந்த ஒரு பணி மருத்துவரோ அல்லது செவிலியர்களும் மருத்துவங்கள் எதுவும் செய்யவில்லை.

மாலை 6 மணி முதல் வலிப்பு மற்றும் குளிர்காய்ச்சல் இருந்து வந்த நிலையில் எனது தாயும், நானும் பலமுறை மருத்துவர்களை அணுகி உடனடியாக வந்து பார்க்கும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் அலட்சியமாக ஒன்றும் ஆகி விடாது என்று உதாசீனப்படுத்தியதின் விளைவாக, 28.06.2021 இரவு 8 மணிக்கு பரிதாபமாக என் கண் முன் உயிரிழந்தார்.

ஆகையால் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் கடமை தவறிய மருத்துவர் மீதும் செவிலியர்கள் மீதும் துறைரீதியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தைக்கு அரசு நிர்ணயித்த நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 218

0

0