மனநலம் பாதிப்புடன் சுற்றித் திரிந்த பெண் : மனிதநேயத்தை விதைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

24 September 2020, 5:53 pm
Traffic Police Rescue - updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம் நேற்று இரவு ரோந்து பணிக்கு சென்று விட்டு காவல்நிலையம் திரும்பி வந்தபொழுது பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிவதை கண்டார்.

அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பெயர் சாவித்திரி என்பதும் அந்த பெண் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தன் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக சேலம் மாவட்டத்தில் உள்ள அவருடன் பணிபுரிந்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் அந்தப் பெண்ணின் விலாசத்தை கண்டறிந்து அந்த விலாசத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த விலாசத்தில் அந்தப் பெண்ணின் அண்ணன் பழனிச்சாமி குடியிருந்து வருவது தெரியவந்தது.

அவரிடம் உங்களது சகோதரி சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் நிலைத்தில் இருப்பதாகவும் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று மாலை சத்தியமங்கலம் வந்த அந்தப் பெண்ணின் அண்ணன் பழனிச்சாமியிடமும் அந்த பெண்ணிடமும் அறிவுரை கூறி அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.

குடும்பத்திலுள்ளவர்களே தன்னுடன் இருப்பவர்கள் மீது அக்கறை கொள்ளாத இந்த காலகட்டத்தில் மனித நேயத்தோடு யாரென்று தெரியாத ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தன்னுடைய சொந்த முயற்சியால் அவர்களது ஊருக்கு திருப்பி அனுப்பிய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியத்திற்கு பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

Views: - 7

0

0