ஆதரவற்றவர்களை குறிவைத்து வழிப்பறி…இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்: பழனியில் பரபரப்பு..!!

Author: Rajesh
28 ஏப்ரல் 2022, 9:10 காலை
Quick Share

திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற பலரும் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் பழனியை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, காளிதாஸ் இருவரும் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே ஆயக்குடி காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

பிடிபட்ட நபர்களிடமிருந்து சிறிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1105

    0

    0