ஆதார் கார்டு இருக்கா? இனி RTO ஆஃபீஸ்க்கு போக வேண்டிய அவசியமே இல்ல!

5 March 2021, 3:17 pm
18 driving license, registration, and other RTO services can now be availed online
Quick Share

நம் இந்தியா டிஜிட்டல் மயமாகிவருவதால், அரசு துறைகளும் அதற்கேற்றவாறு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் இணையம் வழியாகவே வழங்குவதற்காக அரசாங்கம் படிப்படியாக இணைய உலகிற்குள் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது என்று  சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், ஃபாஸ்டேக் என டிஜிட்டல் முறையில் மாறிய சுங்க வரி வசூலைச்  சொல்லலாம். இதனால், டோல் பிளாசாக்களில் வெகு நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை. அதையடுத்து, சாலை பயணிகளின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை மொபைலில் சரிபார்க்கும் வசதி அறிமுமானது.

இப்போது அடுத்த முயற்சியாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் (RTO) சென்று தான் பெற வேண்டும் என்றிருந்த 18 சேவைகள் இணைய வாயிலில் எளிதாக கிடைக்கிறது. இது போன்ற ஒரு டிஜிட்டல் RTO திட்டத்தை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த டிஜிட்டல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து நீங்கள் லைசென்ஸ் பெறுவது முதல் லைசென்ஸ் புதுப்பிப்பது, லைசென்சின் நகலைப் பெறுவது உள்ளிட்ட 18 சேவைகள் டிஜிட்டல் முறையிலேயே கிடைக்கின்றன. இதற்கு முக்கியமான தேவை என்றால் உங்கள் ஆதார் கார்டு தான். இந்த சேவைகளைப் பெறுவதற்கு உங்கள் லைசென்ஸ் உடன் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சரி ஆன்லைனில்  கிடைக்கும் 18 சேவைகள் என்னென்ன?
 1. கற்றல்  உரிமம் (LLR)
 2. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் 
 3. ஓட்டுநர் உரிமத்தின் நகல் 
 4. ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் முகவரி மாற்றம்
 5. சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கான அனுமதி வழங்கல்
 6. உரிமத்திலிருந்து வாகனத்தின் வகுப்பு சரணடைதல்
 7. மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
 8. முழுமையாக கட்டமைக்கப்பட்ட பாடியுடன் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
 9. நகல் பதிவு சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம்
 10. பதிவு சான்றிதழுக்காக NOC வழங்குவதற்கான விண்ணப்பம்
 11. மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு
 12. மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்
 13. பதிவு சான்றிதழில் முகவரி மாற்றத்தின் தகவல்
 14. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சி பதிவுக்கான விண்ணப்பம்
 15. அரசாங்க அதிகாரியின் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
 16. அரசாங்க அதிகாரியின் மோட்டார் வாகனத்தின் புதிய பதிவு அடையாளத்தை வழங்குவதற்கான விண்ணப்பம்
 17. வாடகை-வாகன கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒப்புதல்
 18. வாடகை-வாகன கொள்முதல் ஒப்பந்தத்தின் முடிவு

அவ்வளவுதான்! இந்த சேவையெல்லாம் இனிமேல் ஆன்லைனிலேயே கிடைக்கும். இனிமேல் RTO ஆஃபீஸ் தொலைவில் இருக்கேன்னு புலம்பவோ, போனா நிறைய செலவு ஆகுமோன்னு நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

Views: - 2

4

0