சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பில் வெளியானது 2021 Honda CB150 Verza பைக்!

18 June 2021, 11:15 am
2021 Honda CB150 Verza launched at around Rs. 1 lakh
Quick Share

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது CB150 வெர்சா மோட்டார் சைக்கிளின் 2021 பதிப்பை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இரு சக்கர வாகனம் புதிய தோற்றத்துடன் மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கிறது. இது 150 CC, ஏர்-கூல்டு, SOHC, ஒற்றை சிலிண்டர் இன்ஜினிலிருந்து 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா CB150 வெர்சா பைக்கில் சாய்வான எரிபொருள் தொட்டி, ஸ்டெப்டு-அப்  ஒற்றை துண்டு இருக்கை, ஒரு மேம்பட்ட வெளியேற்ற அமைப்பு மற்றும் வட்டமான ஹெட்லைட் போன்ற அம்சங்கள் உள்ளது.

இந்த பைக்கின் இருக்கை 773 மிமீ உயரம் மற்றும் பைக் 129 கிலோ எடையையும் கொண்டது. இது டியூப் உடனான டயர்களுடன் ஸ்போக்ஸ் வீல்ஸ் அல்லது டியூப் இல்லாத டயர்களில் அலாய் சக்கரங்களுடன் சவாரி செய்கிறது.

இந்த வாகனம் போல்ட் ரெட், மஸ்குளின் பிளாக் மற்றும் மாச்சோ மேட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.

2021 ஹோண்டா CB150 வெர்சா 150 சிசி, ஏர்-கூல்டு, SOHC, ஒற்றை சிலிண்டர் இன்ஜினிலிருந்து ஆற்றல் பெறுகிறது, இது அதிகபட்சமாக 12.86 HP ஆற்றலையும் 12.73 Nm உச்ச திருப்புவிசையையும் உருவாக்குகிறது. இதன் இன்ஜின் 5-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்களைப் பொறுத்தவரை, 2021 ஹோண்டா CB150 வெர்ஸாவில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற சக்கரத்தில் டிரம் பிரேக் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ABS இதில் இல்லை.

மோட்டார் சைக்கிளில் சஸ்பென்ஷன் கடமைகள் முன் பக்கத்தில் உள்ள டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் முன் ஏற்றக்கூடிய சரிசெய்யக்கூடிய dual shock absorbers மூலம் கவனிக்கப்படுகின்றன.

2021 ஹோண்டா CB150 வெர்சா இந்தோனேசியாவில் IDR 20,290,000 (சுமார் ரூ.1.04 லட்சம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள் கிடைப்பது தொடர்பான எந்த தகவலும் இப்போதைக்கு வெளியாகவில்லை.

Views: - 189

0

0